பறையங்குளம், காத்தனேந்தல், கூராங்கோட்டை, கோவிலாங்குளம், கிடாத்திருக்கை, கூலிபட்டி, நீராவி, வேடநத்தம் உள்ளிட்ட மேலும் பல கிராம மக்களின் குல தெய்வமாகிய ஸ்ரீ வீரபத்திரர் – வீரமகாளி அம்மன் திருக்கோவில் 48-வது நாள் மண்டல பூஜை விழா ஆனந்தமாகவும் பக்தி பரவசத்துடனும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 03.09.2025 அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து,
22.10.2025 அதிகாலை 7 மணிக்கு மங்கள இசை முழங்க விழா தொடங்கியது.

பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஸ்ரீ வீரபத்திரர், வீரமகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நன்னீர் ஊற்றும் நிகழ்வு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மண்டல பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.


பல்வேறு கிராமங்களிலிருந்து திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழா நிறைவாக பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அனைத்து பக்தர்களுக்கும் அசைவ அன்னதானம் பெருமளவில் பரிமாறப்பட்டது.