கோவையில் தி.மு.க.மேற்கு மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவைபுதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசைவ விருந்து பரமாறப்பட்டது..

தமிழக முன்னாள் அமைச்சரும் தி.மு.க.மேற்கு மண்டல பொறுப்பாளரும் ஆன செந்தில் பாலாஜியின் பிறந்த நாளை கோவையில் தி.மு.க.வினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக கோவைபுதூர் பகுதியில் செந்தில் பாலாஜி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் விழா சின்னச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது..

கோவை புதூர் பகுதி கழக செயலாளரும் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், நியமன குழு தலைவரும் ஆன மு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில், வர்த்தக அணி அமைப்பாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்..

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கீர்த்தி ராமன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் முன்னதாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து நான்கு பெண்களுக்கு மருத்துவ உதவி தொகை மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நவீன சக்கர நாற்காலி வழங்கப்பட்டது..

தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது இந்நிகழ்ச்சியில், கோவைபுதூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் பரத் கிருஷ்ணன்,மற்றும் ,கஜினி முகமது,நவின்,பிரித்வி,விக்டர் ரவி,சுந்தர்,ராம் பிரபு,இஷான்,தருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்…