பால் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் பால் சப்ளை நிறுத்தம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை
தமிழாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் தமிழக விவசாயிகள் இருந்து கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காததை கண்டித்து ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் கொள்முதல் நாளை மறுநாள் 22.10.225 காலை முதல் பால் கொள்முதல் நிறுத்தம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பால் சப்ளை இல்லாமல் நெருக்கடியை உருவாக்கும் போது தமிழ்நாடு அரசு வெளிமாநிலங்களில் பால் கொள்முதல் செய்து லாரிகள் மூலம் கொண்டுவந்தால் தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
