செய்தியாளர் ஹரிதாஸ் ஆறுமுகம்
புதுச்சேரி காரைக்கல் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ். அதிகார்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் . அப்பகுதி பொதுமக்கள் தங்களது ஊருக்கு செல்லும் பாலம் மற்றும் சாலைகளை மேம்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை அளித்த நிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அக்கரை வட்டம் பகுதிக்கு செல்லும் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் அப்பபகுதி பொதுமக்கள் இப்பாலத்தில் அதிகமான கனரக வாகனங்களில் ஜல்லி மற்றும் மணல்களை எடுத்துச் சென்று பாலத்திற்கு மறுபுறத்தில் அதனை கொட்டி சிலர் வியாபாரம் செய்கின்றனர் எனவும் .இதனால் பாலம் சேதம் அடையும் அபாயம் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்தனர் .
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் பாலத்தின் தற்பொழுதைய வலுத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பாலம் வழிமையாக உள்ளதாகவும் பொதுமக்களின் புகாரின் ஏற்ப கனராக வாகனங்கள் அதிக அளவில் இவ்விழியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அக்கரை வட்டம் ஊருக்குச் சொந்தமான சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மற்றும் உட்புறச் சாலைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூடிய விரைவில் அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைத்து தரப்படும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் அருளரசன் நகராட்சி, செயற் பொறியாளர் முத்துசிவம், மாவட்ட ஆட்சியரின் செயலர் பொன் பாஸ்கர், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
