தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக டெல்டா மண்டல பொறுப்பாளர் ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் மோகன் ராஜ், பொருளாளர் இருதயராஜ், மற்றும் நிர்வாகிகள், ஊர் வலமாக வந்து அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

       முன்னதாக திமுக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் துரை.சந்திசேகரன்  தலைமையில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி,  ஆகியோர் ஊர்வலமாகச் வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

           இதேபோல் அதிமுக சார்பில் மாநக செயலாளர் சரவணன் தலைமையிலும், ஓபிஎஸ் அணியின் சார்பாக தவமணி, முன்னாள் மாவட்ட கௌவுன்சிலர் அமுதா ரவிச்சந்திரன், முன்னாள் துணை மேயர் மணிகண்டன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.