கரூர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்டம் தோகைமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர் மு.கார்த்தி-ன் வழிகாட்டுதலின் பேரில்,கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு நா.பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குளித்தலை நகர செயலாளர் விமல்குமார் (எ) ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தினேஷ் நன்றி உரை நிகழ்த்தினார்.
மாவட்ட சமூக ஊடக பேரவை செயலாளர் சுமன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.கட்சியில் இணைந்தவர்களை மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் சார்பாக மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு நா.பிரேம்நாத் சால்வை அணிவித்து வரவேற்றினார்.