காவல் நிலையத்தில் ஐந்து வருடங்களாக பணிபுரிந்த பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக பெண் காவலர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் துணை ஆணையர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் வந்துருது வாழ்த்தனர்

பெண் காவலர் திண்டுக்கல்லை சேர்ந்த கௌதமி 27 இவர் இரண்டாம் நிலை காவலர் கடந்த 5 வருடங்களாக இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார் கரூர் மாவட்டத்தில் 10 6 2024 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது இவரது கணவர் முருகானந்தம் 29 கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இருவரும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில்

பெண் காவலருக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு நிகழ்ச்சியை வண்ணாரப் பேட்டை காவல் நிலைய பெண் காவலர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள் ஒன்றிணைந்து காவல் நிலையத்தில் உள்ள மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

இதில் வரிசை தட்டுகளுடன் மலர் மாலை ஜடை அணிவித்து ஏழு வகையான சாதம் மற்றும் புடவை வளையல்கள் உள்ளிட்ட தட்டு வரிசைகளுடன் ஊர்வலமாக நடந்து வந்து அவர்களுக்கு நலங்கு வைத்து வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர் இதில் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் அவருக்கு நலங்கு வைத்து மலர் தூவி வாழ்த்தினர்

வீடுகளில் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் வளைகாப்பு போலவே பெண் காவலர்கள் காவல் துறையினர் சார்பில் காவல் நிலைய திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது