திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு அலுவலக வளாகத்தில் சமூக போராளி,தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்பி.,கே என் அருண்நேரு கலந்துகொண்டு இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையத்தில் மாலை ஆறு மணி அளவில் மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் கலைஞரின் திருவுருவ சிலைக்கும், இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார்,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர்கள் சோபனபுரம் கனகராஜ் , மயில்வாகனம், நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, சிவசரவணன், முத்துசெல்வன், அசோகன், கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர்மன்ற தலைவர் செல்வராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், பேரூர் கழக செயலாளர் நடராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், நித்யா கிருஷ்ணமூர்த்தி,நகர துணை செயலாளர் இளங்கோவன், பிரபு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா,அரசு வழக்கறிஞர் ஜெயராஜ்,அன்பு காந்தி, மோகன், நல்லுசாமி, சசிகுமார், இளைஞர் அணி வழக்கறிஞர் தமிழ்செல்வன், மாணவரணி ரெங்கநாதபுரம் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக், நடுவலூர் செல்வகுமார்,ஜேஎம்எஸ் மணி, அறிவொளி சுப்பிரமணியன், ஆதனூர் ரவி,வாலீஸ்புரம் கார்த்திக், ப்ளக்ஸ் சதீஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
