கானூர் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் நடைபெற்ற சந்தன கூடு உரூஸ் விழா-சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய துறை உறுப்பினர் முகம்மது ரஃபிக்கு விழா கமிட்டியினர் வரவேற்பு

அவினாசி அருகே உள்ள கானூர் பகுதியில் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா அமைந்துள்ளது.தமிழகத்தில் மிகவும் சிறப்புப்பெற்ற தர்காவாக அறியப்படும் இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு சந்தன கூடு உரூஸ் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்..

முன்னதாக அவருக்கு விழா கமிட்டியினர் நூருல்லா,ஜமீல்,மற்றும் ஃபாரூக்,ஆகியோர் வரவேற்பு அளித்தனர்..இந்நிகழ்ச்சியில், பூமார்கெட் ஹைதர் அலி திப்புசுல்தான் ஜமாத் பொருளாளர் வழக்கறிஞர் இஸ்மாயில்,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகி அபுதாகீர் மற்றும் சிராஜ்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..