தருமபுரி நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ” மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சி பயணமாக வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி அவருக்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது .
இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, விவசாயி அணி தலைவர் அன்பழகன், நகர செயலாளர் பூக்கடை ரவி ,மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
