திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக் கிழமையில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபடுவர்.
அதேபோல் ஆவணிகடை ஞாயிற்றுக்கிழமை இவ்வாலயத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஸ்ரீ பாடை கட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் இந்த வார உபயதாரர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மாடகுடி ஆசிரியர் டி.பாண்டியன் சார்பில் கஞ்சி வழங்கப்பட்டது.
நிகழ்வில் சங்கத்தின் தலைவர் எம்.எம்.சண்முகவேல், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து, கோ.சண்முகசுந்தரம் யாதவ், கோவி. ராமு, துணைச் செயலாளர்கள் அப்பு (எ) ரத்தீஷ்பாபு, சத்யா ( எ) கலியபெருமாள், நிர்வாக குழு உறுப்பினர் மாடகுடி ஆசிரியர் டி. பாண்டியன், ராஜூ (புவனேஸ்வரி), விசலூர் சேதுராமன் மற்றும் தீவிர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சங்கத்தின் சார்பில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள், பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.
