மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா,ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி யில், ‘ரோட்டரி கிளப் ஆப் மதுரை’ அமைப்பினர் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ரூ1,24,000/- மதிப்பிலான விளையாட்டுச் சீருடைகள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
‘ரோட்டரி கிளப் ஆப்’ மதுரை முன்னாள் ஆளுநர் ராஜசேகரன், மண்டல ஒருங்கிணைப் பாளர் ஆண்டனி பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கிளப் மதுரை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலர் செல்வகுமார், உறுப்பினர் குமார் கலந்து கொண்டனர். நிகழ்வில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆழித்துளி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள் ஹேமா ஸ்ரீ, முகேஷ், சஹரா ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஷிவானி நன்றி கூறினார்.
‘ரோட்டரி கிளப் ஆப் மதுரை’ அமைப்பினர் மூலம் திருக்கானை தொடக்கப் பள்ளிக்கு ரூ. 14,000/- மதிப்பிலான அச்சுப்பொறி இயந்திரம் (Printer) மயிலங்குண்டு தொடக்கப்பள்ளிக்கு ரூ 20,000/- மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும், குன்னத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/- மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் விஜயா, ராமசாமி, லலிதா, ஆசிரியர்கள் சரவணன், பிரதீபா, உமா சிறப்பாகச் செய்திருந்தனர்.
