அரியலூர் பழனி திருமண மண்டபத்தில் நடந்தது மாவட்ட அவை தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார் நகர செயலாளர் இராம மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார் அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா சிறப்புறையாற்றினார்.
திருச்சியில் நடைபெறும் அண்ணா முப்பெரும் விழா மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது அரியலூர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மாநில துணை பொதுச்செயலாளகள் மருத்துவர் ரொக்கையா ஆடுதுறை முருகன் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர்வரதராஜன் மாநில விவசாய அணி செயலாளர் வாரனவாசிராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ் கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் 2 லட்சம் வழங்கினார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் தீர்மானங்களை படித்தார் அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காட்டுபிரிங்கியம்சங்கர் அண்ணாதுரை செந்துறை பழனிச்சாமி ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எல் ஐ சி பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.
வழக்கறிஞர் ஜெயபால் அனைவருக்கும் நன்றி கூறினார் மதிமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி ஜெயபால் தொகுத்து வழங்கிய தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதிநிலை அறிக்கையில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு என்ற புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
