அரியலூர் செட்டிஏரிக்கரை அருகில் பொதுப் பாதை ஒன்று உள்ளது இந்த பாதையை அங்குள்ள பொதுமக்கள் 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் வருவாய் துறையினர் காவல் துறைக்கு இந்த இடத்தை எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது

இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக ஆர்ப்பாட்டம் அரியலூர் தாலுகா அலுவலகம் முன் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரியலூர் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை பின்பு மாவட்ட கலெக்டரை போராட்ட குழுவினர் சந்தித்தனர்

இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார் இதனை தொடர்ந்து போராட்டக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஐவிநாகராஜன் மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன் தோழர் துரைசாமி இரா மணிவேல் எல்ஐசி கிருஷ்ணன் துரை அர்ஜுனன் அருண்பாண்டியன் மலர்கொடி பத்மாவதி சந்தானம் சவுரிராஜன் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

மூத்த தோழர் ஆர் சிற்றம்பலம் நன்றி கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமை தாங்கும் போராட்டம் என்பதால் அரியலூர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.