புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. V.P. ராமலிங்கம் (முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களின் ஆலோசனையின் படி, பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் உழவர்கரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய தலைவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திரு.உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயலாளருமான திரு. ராமு, மாநில பொதுச் செயலாளர் திரு. லட்சுமி நாராயணன், மாநில செயலாளர் திரு. தமிழ்மாறன் ஆகியோர் நிர்வாகிகள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் திரு.ரமண சங்கர், துணைத் தலைவர்கள் திரு. செல்வக்குமரன், திரு.ஆச்சீ ஆறுமுகம், செயலாளர்கள் திரு.ஆறுமுகம், திரு.சத்தியமூர்த்தி, திரு.கணபதி, பொருளாளர் திரு.வேலன், ஐ.டி. வின் திரு.அருள்வேந்தன், உழவர்வரை தொகுதி தலைவர் திரு.கோவிந்தராஜ், பொறுப்பாளர் திருமதி.லதா, கதிர்காமம் தொகுதி தலைவர் திரு.தினேஷ், பொறுப்பாளர்திரு.சந்துரு, இந்திரா நகர் தொகுதி தலைவர் திரு.அருள்ஜோதி, தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் திருமதி.கவிதா, லாஸ்பேட்டை தொகுதி பொறுப்பாளர் திரு.மகேஷ் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் 6 sept அன்று அனைத்து தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.