திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது..
இந்த ஊர்வலமானது தாராபுரம் காவல் நிலையம் முன்பு தொடங்கிய அண்ணா சிலை பூக்கடை மூக்கு ஜவுளிக்கடை வீதி என்,என் பேட்டை வீதி ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக தாராபுரம் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரஷ் அசோக் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் காவல் ஆய்வாளர்கள் விஜய சாரதி. முன்னிலையில் கொடி அணி வகுப்பு பேரணியில் நடைைபெற்றது மூலனூர் குண்டடம் அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸ் பங்கேற்றனர்.
