திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் சுதந்திர இந்தியாவில் தமிழரின் பெருமை என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் இரா.பாஸ்கரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் இராணுவ வீரரும், வட்டாட்சியருமான வ. முருகானந்தம் பங்கேற்று, சுதந்திர இந்தியாவில் தமிழரின் பெருமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் துணை செயலாளர்கள் சா.ரஷீனா, ஜா.தமீம், எ.ராஜ்குமார், க.வாசு, செயற்குழு உறுப்பினர்கள் ஆ.முரளி, கு.சதானந்தன் ஆகியோர் கவிதை வாசித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் பூ.சண்முகம், ஸ்ரீமந்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

எக்ஸ்னோரா மலர் சாதிக், கலைஞர் தமிழ்ச் சங்கம் வந்தை குமரன், அ.ஷாகுல் அமீது, கவிஞர்கள் தமிழ்ராசா, எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் துணைத் தலைவர் வந்தை பிரேம் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.