விஜயகாந்த் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விமல் ஆகியோர் முன்னணியில் நடிகரும், முன்னால் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் மற்றும் அரசியல் பிரமுகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அவரது உருவ படத்திற்கு எழுத்தாளர் விவேக் ராஜ் மாலை அணிவித்தார். விழாவில் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான ப்ரியா, சுல்தான் அம்மா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்