திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலமான அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் கோயிலில் இரவு 7 மணிக்கு ஆவணி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, சிவகாமி அம்மன் சமேத ஆனந்த பைரவ கோலாகல நடராஜ பெருமானுக்கு மஞ்சள் பால் தயிர் தேன் சந்தனம் போன்ற அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.