கமுதி அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம், இடையங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காதர் முகைதீன்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேஷ்வரன், வேலவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரபாண்டி, தங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்,வட்ட வழங்கல் அலுவலர் விஜயா, வருவாய் ஆய்வாளர்கள் பிரியதர்ஷினி, பரமேஸ்வரி, பூரணிமா
உதவி தோட்டக்கலை அலுவலர் அருண் ப்ராங்க்ளின், உதவி மேலாண்மை அலுவலர் இந்துமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெகஜீவன்ராம், இராமர், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் காய்கறிகள் விதைத்தொகுப்பு 25 பயனாளிகளுக்கும், பயர் வகை தொகுப்பு 5 பயனாளிகளுக்கும், குடும்ப அட்டை 2 பேருக்கும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை 3 பேருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் மனுக்கள் 452 பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டது