பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் சிறு சிறுக சேமித்து வைத்த தொகையை சபாநாயகர் R. செல்வம் அவர்களிடம் வழங்கினார்கள்

அரசு சார்பில் பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் சேமிப்பாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.3,850/- நிதியை பூரணாங்குப்பம் முழியின் குளம் சீரமைப்பு பணிக்கு நன்கொடையாக சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் R. செல்வம் அவர்கள் முன்னிலையில் முழியன்குளம் சீரமைப்பு பணி குழு சார்பாக பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்களிடம் வழங்கினர்கள் .

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சிரில் நிக்கோலஸ் அவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தக்ஷிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், சக்திபாலன், சண்முகம், ரங்கநாதன், மெய்யழகன், திருவேங்கடம், நாகரத்தினம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குகநாதன், உள்ளிட்டவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.