அரியலூரில் நடந்தது அரக்க முக முகமூடி அணிந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பைரவன் தலைமை தாங்கினார்
மாவட்ட இணைச்செயலாளர் உதயசூரியன் மாவட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகமூர்த்தி மாவட்ட இணை செயலாளர் இளவரசன் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார் விளக்க உரையாற்றினார் அரசு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் அரசு அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் மற்றும் ராகவன் காந்தி காமராஜ் மகாலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்
மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்
சாலை பணியாளர் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி சென்னையில் 12 8 2025 இல் நடைபெற்ற தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்களை கைது செய்து கொடுமைப்படுத்திய காவல்துறையை கண்டிப்பது என்ற கோரிக்கைக்காக கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.
