மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் 2-வது மாநில மாநாடு 21-ந் தேதி நடப்பதையொட்டி 12 லட்சம் இருக்கைகள் போடப்படு கின்றன. ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழக வெற்றிக்கழக மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறு கிறது. கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் பூமிபூஜை நடந்தது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைந்துள்ளது.


விழா மேடை, கட்சித்தலைவர் விஜய் தொண்டர்களை நடந்து சென்று சந்திப்பதற் கான ராம்ப் வால்க் நடை மேடை மற்றும் தொண்டர்கள் அமரும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பிரமாண்ட நுழைவு வாயில் ஒலி, ஒளி கருவிகள் பொருத்துவ தற்கான கேலரிகள், பல வண்ணமின்விளக்குகள் வைக்கப்பட்டு, அதற்கான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டு நுழைவாயில் பிரமாண்டமாக அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதேபோல மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி தயார் செய்யப்பட்டுவருகிறது. மேலும் மாநாட்டு திடலில் சுமார் 1.5 லட்சம் பேர் அமர இருக்கை வசதிகள் அமைக்கப்படுகின்றன.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மேலும் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் லாரி களை மாநாட்டு திடலில் நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.


மாநாட்டு திடலை சுற்றி 5 ஆயிரம் விட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு வழங்க குடிநீர் பாட்டில்களும் தயாராக உள்ளது. மாநாட் டுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.