கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 79வது சுதந்திர தினம், வானவில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல், கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தல் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.

79 ஆவது சுதந்திர தினத்தில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றினார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் சுவாமிநாதன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பேராசிரியை அமுதா, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு பேரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவ மகேஸ்வரி பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் முத்துக்குமார், மலர்க்கொடி உறுப்பினர் செல்வி,பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஹானஸ்ட் ராஜ்,செந்தூர பாண்டியன்,சசி, சீதாலெட்சுமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா 79வது சுதந்திர தினம் குறித்து பேசும் பொழுது இந்தியாவின் 79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 2025 அன்று கொண்டாடப்படுகிறது , இது 1947 முதல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், இந்தியாவில் 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் . இந்த நாளில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்,

நாட்டின் இதுவரையிலான பயணத்தை சிந்திக்கிறோம், மேலும் ஒவ்வொரு குடிமகனும் வலுவான, உள்ளடக்கிய மற்றும் துடிப்பான இந்தியாவை உருவாக்கும் பாதையில் இறங்க ஊக்குவிக்கிறோம்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நினைவுகூர்ந்து, ஒவ்வொரு தலைமுறையினரையும் இந்தியாவின் மேலும் வளர்ச்சியை நோக்கி ஊக்குவித்து, அரசியலமைப்பை நிலைநிறுத்தி, அனைவருக்கும் நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளைப் போற்றி வளர்ப்பதே சமகால கொண்டாட்டங்களின் நோக்கமாகும்.

என்றும் மாணவர்கள் அனைவரும் சுதந்திர தின வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பேசினார். இந்நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா கணினி உதவியாளர் தையல்நாயகி, மழலையர் ஆசிரியை கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்