தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான எஸ்எஸ்.குளம் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது 14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து,கால்பந்து,கூடைப்பந்து,ஹாக்கி,,டேபிள் டென்னிஸ்,மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடைபெற்று வருகின்றன..
இந்நிலையில் ஹாக்கி போட்டிகளுக்கான இறுதி போட்டியில் அன்னூர் கே.ஜி.மெட்ரிக் பள்ளி மற்றும் கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின இதில் 4 க்கு 2 கோல்கள் என்ற கணக்கில் கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது..
இந்நிலையில் வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி கவுரவிக்கும் விழா வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற பள்ளி ஹாக்கி அணியினருக்கு பள்ளியின் நிர்வாகி ஜோனத்தான் சாம்வேல்,மற்றும் பள்ளி முதல்வர் ஹெரால்டு ஷாம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்..
இதே போல தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற மாணவி தன்யாஸ்ரீக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது இது குறித்து பள்ளியின் நிர்வாகி ஜோனத்தன் கூறுகையில்,எங்களது பள்ளியில் பயிலும் மாணவ,,மாணவிகளுக்கு கல்வி கற்பித்தலோடு விளையாட்டு மற்றும் திறன்களை ஊக்குவிப்பதாக தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
