துறையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி துறையூர் குறுவட்ட தடகளப் போட்டியை (2025-2026) சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை விளையாடி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் பெ.முருகேசன் அறிவுறுத்தலின்படி துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயராமன் முன்னிலை வகிக்க, பச்சபெருமாள் பட்டி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரவிசந்திரன்(பொ) வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் டாக்டர் எஸ்.சரோஜினி ஒலிம்பிக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.இதனையடுத்து நடைபெற்ற ஓட்டம் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல்,கபாடி, உயரம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த விளையாட்டு போட்டிகளில் துறையூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 37 பள்ளிகளை சேர்ந்த நடுநிலை பள்ளி ,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுமார் 480 மாணவிகள் ,515 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள்.விழா நிறைவில் பச்சப்பெருமாள் பட்டி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை வி. வேதநாயகி நன்றி உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
