தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் உள்ள நன்மைகளை எடுத்து கூறும் விதமாக உலகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடுப்படுகிறது..
இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக தாய்ப்பால் கொடுப்ப தால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் , தாய்ப்பால் கொடுக்கும் முறைகள்,மற்றும் தாய்மார்கள் உண்ணவேண்டிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது..
விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுபாஷினி, கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இதில்,மகப்பேறு மற்றும் தாய்ப்பால் தொடர்பான துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள்,சுஷ்மா ரவீந்திரன்,நித்யா பொன்முடி,மஞ்சரி,சுகன்யா,சுனில் மற்றும் தாய்ப்பால் வங்கி தலைமை செவிலியர் டெய்சி ரெஜீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்,மற்றும் குழந்தை பெற போகும் கர்ப்பிணிகளுக்கு
குழந்தையை சரியான முறையில் பிடித்து பால் கொடுக்கும் முறைகள், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து,எடுத்து கூறினர்…
மேலும் இதில் கலந்து கொண்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்..
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஊட்டச்சத்து துறை தொடர்பான மாணவர்களின் கண்காட்சி நடைபெற்றது..
இதில்,பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியில் தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை கண்காட்சியாக காட்சி படுத்தினர்..
மேலும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுப்போருக்கு இயற்கையாக பால் சுரக்க தேவையான உணவுகள்,பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்,புரதம் நிறைந்த மற்றும் வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்த உணவு பொருட்கள் போன்றவற்றை காட்சிபடுத்தி இருந்தனர்…
தாய்ப்பால் தொடர்பான அனைத்து தகவல்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் தெரிவித்தனர்..
