சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண்மொழி என்கின்ற மடோனா வயது 31, மணலி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது
இவர் தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது
அவரை வழி மறித்த ஒரு கும்பல் கத்தியை எடுத்து அருண்மொழியை கொடுரமாக வெட்டி தாக்கியுள்ளனர்

இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார் இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அருண்மொழியை ‌ அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதுகுறித்து காசிமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆர் கே நகரில் உள்ள இடம் தகராறில் உறவினர்களே கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பாக வடபெரும்பாக்கம் சேர்ந்த செந்தில்குமார் வயது 31,கமல் வயது 23 மற்றும் தண்டையார்பேட்டை சேர்ந்த
ரூபன் வயது 31 ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றன