தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குளிா்பானங்களை வழங்கினாா்.
தூத்துக்குடி உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பால், பழம், மேங்கோ ஜீஸ் பாட்டில், ரஸனா, பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமால்ட், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி பெவின், வட்ட பிரதிநிதிகள் ஸ்டாலின், அந்தோனிராஜ், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், ஜேசராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஜேடியம்மா, சாந்தி, மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, மகளிர் அணி புஷ்பா, ரெக்ஸி, உள்பட பலர் கலந்து கொண்டனா்.
