கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து அசத்தல்

பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது..
குறுமையை அளவில் நடைபெற்று வரும் இதில்,கராத்தே,சிலம்பம்,கால்பந்து,கைப்பந்து,உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன..

இந்நிலையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

வயது அடிப்படையில் ஒற்றை கொம்பு, இரட்டை கம்பு,நடுக்கம்பு என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில்,கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்..

இந்நிலையில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ,மாணவிகளுக்கு வி.சி.எஸ்.எம். பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது..

இதில் கலந்து கொண்ட பள்ளியின் தாளாளர் ஹெரால்டு ஷாம் தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கலம் என ஒன்பது பதக்கங்கள் வென்ற மாணவ,மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..