தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் அருகே இலவச கண் மருத்துவ முகாம்.
கோவை சங்கரா கண் மருத்துவமனை போளரை கலைகோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கல்வியாளர் ஜெய்லானி மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கான இலவச கண் மருத்துவ முகாம்
வருகின்ற 27 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மூலனூர் அருகே உள்ள போளரை கலைக்கோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் மருத்துவரின் இலவச ஆலோசனை வழங்கப்படும்.அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் (IOL), உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு அனைத்தும் கோவை சங்கரா கண் மருத்துவமனையால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு சொட்டு மருந்து மற்றும் கருப்பு கண்ணாடி இலவசமாக வழங்கப்படும்.அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் முன்னரே தெரிவித்துவிட்டு வரவேண்டும்.
ஒரு செட் சுத்தமான ஆடைகளை கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும்.மேலும் கோவை சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அறிவிக்கப்பட்ட நாளில் முகாம் நடந்த இடத்திலேயே செய்யப்படும் மறுபரிசோதனைக்கு அவசியம் தவறாமல் வர வேண்டும்.
அறுவைசிகிச்சைக்கென முகாமிற்கு வரும் நோயாளிகள் இருதய நோய், இரத்தக்கொதிப்பு. சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவர்கள் முன்னரே மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அவர்கள் தற்போது சாப்பிடும் மருந்து மாத்திரைகளைக் கையோடு கொண்டு வரவேண்டும்.முகாமிற்கு வருபவர்கள் கண்டிப்பாக தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை நகல் , ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல் இரண்டு பிரதிகள் மற்றும் குடும்பத்தினர் ஒருவரின் தொலைபேசி எண் எழுதி கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதற்கான ஏற்பாடுகளை கலைக்கோவில் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர், கல்வியாளர் ஜெய்லானி மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராமர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
