பள்ளிகள் ,கல்லூரிகள் அருகில் கடைகளில் பீடி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் ஆலோசனையின் பேரில் உதவி காவல் ஆணையாளர் சத்தியன் தலைமையிலான போலீசார் பள்ளி கல்லூரியில் அருகில் உள்ள கடைகளில் தீடீர் சோதனை நடத்தினர்.

இதில் மாதவரம் ரவுண்டானா ஜே. ஜே கார்டன் அருகில் பள்ளிக்கூடம் அருகே உள்ள தேநீர் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அங்கு ஐந்து பண்டல்களில் உள்ள சிகரெட் மற்றும் புகையிலை பாக்குகளை மாணவர்களுக்கு விற்பனைக்கு செய்ய இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்து உணவு பொருள் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து கடை உரிமையாளரான நவ்பால் (வயது 35) என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.