திருவொற்றியூர்.
திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் அமைந்துள்ள அரசு புனித பால்சேவியர் பள்ளியில் திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டும் தான் செல்ல வேண்டும், குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது,
டிராபிக் சிக்னல்களில் உள்ள கலர் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர்கள் வினோத், குமார், பழனியாண்டி, பள்ளி தலைமை ஆசிரியை சில்வியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள் எழுதிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை செல்லும் போது பாதுகாப்புடன் செல்வது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
