திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவை சர்வசாதகம் சிவஸ்ரீ திப்பிராஜபுரம் டாக்டர் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார் (சுரேஷ்) மற்றும் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ விருப்பாட்சிபுரம் ஏ. குமார் சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 8- மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா காட்சி விசேஷ நாதஸ்வர இன்னிசை, செண்டை மேளம் மற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ஆர். சிவராம கிருஷ்ணன், செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, மீனாராம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ வைத்தீவரர் நற்பணி மன்றம் மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இன்று 03- ந்தேதி வியாழக்கிழமை காலை 8- மணிக்கு மண்டல பூஜை தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.