திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 30- ந்தேதி மாலை யாகசாலை ப்ரவேசம், யாக பூஜைகள், ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை காலம் -1, 01-ந்தேதி காலை காலம் -2 பூஜையும், மாலை காலம் -3 பூஜையும் நடைபெற்றது.

02- ந்தேதி புதன்கிழமை காலை 4-மணிக்கு காலம் -4 பூஜை நடைபெற்று காலை 6- மணிக்கு யாத்ரா தானம், வேத பாராயணம், மல்லாவி வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு, காலை 6.15 க்கு மேல் 6.45 க்குள் அனைத்து விமான, ராஜகோபுர, மூலாலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

காலை 10- மணிக்கு சுவாமி, அம்பாள் மஹா அபிஷேகம், பஞ்சமூர்த்தி மற்றும் ஆனி திருமஞ்சன நடராஜர் அபிஷேகம்,‌ தீபாராதனை நடைப்பெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை சர்வசாதகம் சிவஸ்ரீ திப்பிராஜபுரம் டாக்டர் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார் (சுரேஷ்), ஆலய அர்ச்சகர் விருப்பாட்சிபுரம் சிவஸ்ரீ ஏ. குமார் சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம் எல் ஏ, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் குமாரமங்கலம் கே.சங்கர், யூ.இளவரசன், நகர அவைத் தலைவர் ரத்னகுமார்,ஸ்ரீ வைத்தீஸ்வர் நற்பணி மன்ற கெளரவ தலைவர் ஆர்.செல்வம், கெளரவ ஆலோசகர் மாஸ்டர் எஸ். ஜெயபால்,துணைத் தலைவர்கள் சா. குணசேகரன், ஜெய. இளங்கோவன், செயலாளர் ஆர்.ஜி. பாலா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ். அருள் முருகன், ஜி. பாலகிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பா. வசந்தி உள்ளிட்டோர் மற்றும் திரளாக பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம வாசிகள், ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி, மீனாராம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ வைத்தீவரர் நற்பணி மன்றம் மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.