கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாநகராட்சியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா நடைபெற்றது கரூர் மாநகராட்சி உட்பட்ட இரண்டு மண்டல அலுவலக திறப்பு விழா சிறப்பு அழைப்பாளர் முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


மாவட்ட ஆட்சியர் .மீ.தங்கவேல், தலைமையில், நடைபெற்றது.கரூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய மண்டலங்களுக்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 புதிய அலுவலகங்களை திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் திரவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றார்போல் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக நகராட்சி நிர்வாகத் துறைக்கு அதிகளவில் நிதி ஒதக்கீடு செய்து நகர்ப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்துள்ளார்கள்.தரைதளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவு தளம், வருவாய் பிரிவு, கழிப்பறைகள், கனினி மையம், அலுவலகம், முதல்தளத்தில் மண்டலத் தலைவர் அறை, கூட்டரங்கம், மாமன்ற உறுப்பினர்கள் அறை, நகரமைப்பு பிரிவு உள்ளிட்ட அறைகள் உள்ளது.

இந்த புதிய அலுவலகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச்சான்று, ஆதார் மையம், இ-சேவை மையம், குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்துதல், நகரமைப்பு வரைபடம் அனுமதி உள்ளிட்ட அரசின் சேவைகளை மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் .க.சிவகாமி சுந்தரி, மேயர்.வெ.கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் சக்திவேல் அன்பரசு, கனகராஜ்,கோல்டு ஸ்பாட் ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக சார்ந்த மாவட்ட ,மாநகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்