தடகள தங்க வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் பங்கேற்ற சாரா நர்சிங்
கல்லூரி விளையாட்டு ஆண்டு விழா.

தாராபுரத்தில் சாரா நர்சிங் கல்லூரியின் விளையாட்டு விழா கோலாகலமாக
திருவிழா போல் சிறப்பாக நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செயல்பட்டு வரும் சாரா நர்சிங் மற்றும் சாரா நர்சரி கல்வி நிறுவனங்களின் வருடாந்திர ஆண்டு விளையாட்டு விழா மிகுந்த உற்சாகத்துடன் மற்றும் மாணவ மாணவிகளின் உறுதியான பங்கேற்புடன் நடைபெற விருது விழா போல சிறப்புபெற்றது.

இந்த விழா, சாரா கல்வி குழும நிறுவனர் டாக்டர் எம். ஜெய்லானி அவர்களின் தலைமைவகித்து பேசினார் . விழாவினை சிறப்பித்து சாரா நர்சிங் கல்லூரியின் சேர்மனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியைகே. மரியம் உள் ஆசியா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மேலும் சாரா நர்சரி கல்லூரி இயக்குனர் பொறியாளர் பி. எம். முகமது சதுர்தீன், துணைத்தலைவர் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் ஹாலிதா ஷமீம், செயலாளர் பெனாசிர் பேகம், மக்கள் தொடர்பு அலுவலர் எம். சகாபுதீன், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
விழாவின் முக்கிய அம்சமாக உலக அளவில் புகழ்பெற்ற தடகள வீராங்கனை, ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற வீராங்கனை சாந்திசௌந்தரி ராசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர், நடைபெற்ற தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகள், பரிசுகள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கியதோடு, “விளையாட்டு மட்டுமல்ல, ஒழுக்கமும், ஒற்றுமையும் வாழ்க்கையின் அடிப்படைகள்” எனக்கூறி மாணவர்களுக்கு உற்சாக உரை நிகழ்த்தினார்.

விழாவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டம், நீளத் தாவுதல், 400 மீட்டர் தடுப்போட்டம், குழு ரிலே ஓட்டம், கபடி, கோகோ, கிரிக்கெட் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்று மொத்தத்திலும் அதிக வெற்றி பெற்ற பெண் வீராங்கனை மாணவி ஹன்சிகா மற்றும் ஆண் வீரர் மாணவர் சஞ்சய் ஆகியோர் “சாரா ஸ்போர்ட்ஸ் சாம்பியன் 2025” எனும் விருதுகளைப் பெற்றனர் விழாவின் சாரா நர்சிங் கல்லூரி பயிற்சியாளர் குணசீலன் வரவேற்புரை ஆற்றினார்.மாணவிக்கல்வி மெர்லின் ஜென்ட் நன்றியுரை ஆற்றினார்.

சாரா கல்வி குழுமத்தின் இவ்விழா மாணவர்களின் உடல் நலம் மற்றும் போட்டி மனப்பாங்கை ஊக்குவிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றது.

பேட்டி:சாந்திசௌந்தரி ராசன்.
ஆசிய போட்டிகளில் கலந்து கொண்ட
தடகள தங்க வீராங்கனை.