திருவொற்றியூர்,
திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் அரசு கல்லூரி, தனியார் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்ட பள்ளி உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பூந்தோட்ட தெரு வழியாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த தெருவில் இருந்த.பழைய மரம் ஒன்று திடீரென்று சரிந்து பூந்தோட்ட தெரு சாலையில் விழுந்தது, பள்ளி, கல்லூரி விடும் நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அந்த சாலை வழியாக செல்வார்கள், அதிஷ்டவசமாக மரம் விழுந்தபோது மாணவர்கள் யாரும் அந்த வழியாக செல்ல வில்லை, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் பின்னர் வழக்கம் போல போக்குவரத்து தொடங்கியது.
