கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகா கலையை முறையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் யோகா செய்த சிறுவர்,சிறுமிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் சுமார் ஐயாயிரம் பழமை வாய்ந்த யோகா கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த 11 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது..
வழக்கமான யோகா பயிற்சியின் ஆரோக்கிய நன்மைகளில் இரத்த அழுத்தம் குறைதல்,உடல் ஆரோக்கியம், மன அழுத்தம் குறைதல் உள்ளிட்ட முக்கிய பயன்கள் ஏற்படும் நிலையில் யோகாவை முறையாக செய்வதில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவே முறையான யோகாவை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் யோவா யோகா அகாடமி மற்றும் டெக்கத்லான் இணைந்து பிராட்வே வணிக வளாகத்தி் யோகா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது..
இதில், யோகாவில் பயிற்சி பெற்று பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ,மாணவிகள் பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர் இதில், பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாலாசனம்,வஜ்ராசனம், பாத ஹஸ்தா சனம், திருகோண ஆசனம், புஜங்கா சனம், உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர்..
