தென்காசி,

தென்காசியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகர்மன்றத் தலை வர் ஆர். சாதிர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டஅறிக்கை:

தென்காசியில் சுழற்சி முறை யில் ஒன்றரை மணி நேரம் என்ற அள வில் சீராக குடிநீர் விநியோகிக்கப்படுகி றது. குழாயில் அடைப்போ, பழுதோ ஏற்பட்டால் உடனடியாக சீரமைத்து, குடிநீர் வழங்கப்படுகிறது.

மின்சாரம் இருக்கும்போது குடிநீர் வழங்க வேண்டும், மின்சாரம் தடைபட் டபோது வழங்கக் கூடாது, குறிப்பிட்ட நேரத்துக்கும் மேலாக குடிநீர் வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத் தையோ, நகர்மன்ற உறுப்பினர்க ளையோ, அதிகாரிகளையோ, பணியா ளர்களையோ நிர்பந்தப்படுத்த வேண் டாம். குடிநீரை சிக்கனமாக பயன்ப டுத்தி, நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்து ழைக்க வேண்டும். விரைவில் 5 நாள்க ளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடி நீர் வழங்கத் தேவையான பணிகளை நிர் வாகம் மேற்கொண்டுள்ளது . அதுவரை மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கின்றனர்.