ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக விஎம்சி குழுமங்களின் தலைவர் மற்றும் முன்னாள் ரோட்டரி சர்வதேச இயக்குனர் ரோட்டேரியன் பாஸ்கர் சொக்கலிங்கம், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர், ரொடேரியன், அட்வகேட் ஏகேஎஸ் என். சுந்தரவடிவேலு, சான்ஃபிட்ஸ், நிறுவனத்தின் நிறுவன தலைவர், திரு ஏ.வி. வரதராஜன் மற்றும் ரமணி அண்ட் அசோசியேட்ஸ், நிறுவன பங்குதாரர் மற்றும் முதுநிலை கட்டட கலைஞர், ரொட்டேரியன், டி.எஸ். ரமணி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.

மேலும் விழாவில் தொழில் சேவை பிரிவு, மாவட்ட தலைவர், ரொட்டேரியன் பி பி லட்சுமணன், தொழில் விருதுகள் பிரிவு மாவட்ட செயலாளர், ரொட்டேரியன் ரமேஷ் வீரராகவன், உதவி ஆளுநர், ரொட்டேரியன் சாந்தி சுரேஷ், ஜிஜிஆர் ரொட்டேரியன், எம்பிஹெச்எப். எல். கார்த்திகேயன் மற்றும் தொழில் சேவை பிரிவு, தலைவர். ரொட்டேரியன் எம்பிஹெச்எப். முருகேசன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

விழாவில் கோவையில் 100 வருடங்களுக்கு மேல் மருத்துவம் மற்றும் கல்வி சேவைக்கான விருது கோவை பிஎஸ்ஜி அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர், திரு. L. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பெரிதும் முயற்சி எடுத்து கிராம அபிவிருத்திக்கான சமூக சேவை விருது, அரோமா குழுமங்களின், நிர்வாக இயக்குனர், திரு. ஆர் பொன்னுசாமி அவர்களுக்கும், தொழில் முனைவோர் சமூக சேவை பிரிவு விருது, கோவை லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர், ரெட்டேரியன் எம்டி எஸ். முத்துராமன் அவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்சேஷனல் தலைவர் ரொட்டேரியன் பி எச் எப் கே சி ஸ்ரீனிவாசன், செயலாளர் ரொட்டேரியன் பி ஹெச் எப் டி ராகவேந்திரன் செய்து இருந்தார்கள்