திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழந்து, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
மழையின் போது, திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, வடக்கு மாடவீதியில் இருந்த, ராட்சத மரம் திடீரென முறிந்து சாலையில், விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து, போக்குவரத்து இடையூறாக உள்ள, மரத்தினை உடனடியாக அகற்றி தர கோரினார்.
அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு வீரர்கள், மரம் வெட்டும் இயந்திரம் மூலம், மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்தில், மரக்கிளைகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.
