காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜே.கே.டயர் நிறுவனத்தின் சார்பில் கொளத்தூர், ஜேகே டயர் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள் மற்றும் காவல் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜே.கே. டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் ரூ.27.50 லட்சத்தில் கொளத்தூர், ஜேகே டயர் நிறுவனம் மலைப்பட்டு மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் நான்கு இடங்களில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஜேகே டயர் நிறுவனத்தில் நுழைவாயில் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடை மற்றும் காவல் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து பேருந்து நிழற்கூடை மற்றும் காவல் உதவி மையத்தை திறந்து வைத்தார்.
ஜேகே டயர் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட துணை பொது மேலாளர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மணிமங்கலம் சரக உதவி ஆணையர் சுந்தர், ஜேகே டயர் நிறுவனத்தின் வணிகத்துறை பொது மேலாளர் பங்கஜ்ஜெயன், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளாரை அரிகிருஷ்ணன், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், ஜேகே டயர் நிறுவனத்தின் நிர்வாகிகள் , DREAMS FOUNDATION மேலாளர் டேவிட்பால் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
