தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்.
திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் ஆபரேசன் சிந்தூர் என்னும் பிரதமர் மோடி தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ தாக்குதலுக்கு நன்றி தெரிவித்தும்,இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.குண்டடம் பொடாரம்பாளையம் பிரிவில் தொடங்கிய இந்த பேரணிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குண்டடம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார் .கோவை-மதுரை பைபாஸ் ரோடு வழியாக வந்த பேரணி குண்டடம் காவல் நிலையம் அருகே வந்து நிறைவடைந்தது.
இதில் பா.ஜ.க இளைஞரணி மாநில செயலாளர் யோகி,ஸ்ரீராம் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதுபோன்று குண்டடம் அருகே உள்ள மேட்டுக்கடையில் நடைபெற்ற பேரணிக்கு மேற்கு ஒன்றிய தலைவர் பொன் கந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் வி எஸ் வி நிறுவனங்களின் தலைவர் சுப்பிரமணியம் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேட்டுக்கடையில் உள்ள தனியார் உணவகம் அருகே தொடங்கிய இந்த பேரணி கடைவீதி வழியாக சென்று மீண்டும் தனியார் உணவகம் அருகே வந்து நிறைவு பெற்றது.
