பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு…புத்தம்புது பொலிவுடன் காவிரி- அரசலாறு தலைப்பு
மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேட்டுக் தெருவில் உள்ள காவிரி -அரசலாறு தலைப்பில் புத்தம் புது பொலிவுடன் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தஞ்சாவூர், நாகை ,திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணையில் காவிரி, வெண்ணாறு , கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் மொத்தம் 114 ஷட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.
மேட்டூர் அணை திறக்கப்பட ஒரு மாத காலத்திற்கும் குறைந்த நாட்களே உள்ளதால் கல்லணைக்கு வந்து சேரும் காவிரி நீர் திறப்பதற்கு ஏதுவாக பாபநாசம் தாலுக்கா மேட்டுத்தெரு பகுதியில் உள்ள காவிரி- அரசலாறு தலைப்பில் உள்ள அணைகளின் பாலத்தில் வர்ணம் பூசும்பணி நடைபெற்றது.
மேலும் ஷட்டர்கள் இறக்கி , ஏற்றி ஆய்வு செய்தல், ஷட்டர்களில் துருப்பிடிக்காத வகையில் பெயிண்ட் அடித்தல் , கிரீஸ் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்…,
காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பாக அணை முழுவதும் செப்பனிடும் பணி , பழுதான ஷட்டர்கள் சரி செய்யும் பணி உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டது.எனவே காவிரி -அரசலாறு தலைப்பில் புதுப்பொலிவு அளிக்கும் வகையில் வர்ணம் பூசும் பணி, பூங்காக்கள் பராமரிக்கும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்கப்பட்டது.
