இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 20.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாயு அலுவலர் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக தொடங்கப்பட்டது. நிகழ்வில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கினர்.

மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த தீர்வாயத்தில், நிலம், வரி, உரிமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகிறது.

இத்தகைய வருவாய் தீர்வாயங்கள் மூலம் பொதுமக்கள் பிரச்சனைகள் நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.