புனித சார்லஸ் நாடு நிலைப்பள்ளியில் 1994.. 2002 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்துகொண்டு முன்னாள் ஆசிரியர் பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்

விழாவில் மேயர் ஜெகன் பேசுகையில் 25 ஆண்டு முன்பு படித்த பள்ளி மாணவர்கள் இன்று எல்லோரும் ஒன்று கூடி உள்ளீர்கள் அனைவருக்கும் எனது நன்றி படித்த பள்ளிவை நினைத்து வந்ததற்கு ரொம்ப நன்றி சார்லஸ் ஸ்கூல் நிர்வாகம் இந்த பள்ளியை நிர்வாகிக்கிறது கொரானாவுக்கு பின்பு அரசு பள்ளிகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது சாமுவேல் புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 1300 மாணவர்கள் படித்து வருகின்றனர் முன்னாள் ஆசிரியர் பெருமக்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது

தற்போது உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் எந்த பள்ளியில் நாம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை நாம் எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம் குழந்தைகளுக்கு என்ன படிக்க விரும்புகிறதோ அதையே படிக்க வைக்க வேண்டும் கைப்பேசியை குழந்தைகளிடம் அதிகமாக கொடுக்க வேண்டாம் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது தந்தை என்னை வெளியே அனுப்ப மாட்டார் கிடைக்கும் நேரத்தில் நான் வெளியே சைக்கிளில் வருவேன் அப்போது மாநகரில் 2 ரோடு தான் இருந்தது சைக்கிள் ஓட்டுவது மூலம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது நிறைய பூங்கா உள்ளது பெண்கள் தற்போது எல்லா பணிகளுக்கும் செல்கிறார்கள்

பெண்கள் மன தைரியத்துடன் எதையும் சந்திக்க வேண்டும் கல்விதான் அசைக்க முடியாத சக்தி நம்ம படித்த பள்ளிக்கு என்ன செய்ய முடியுமோ அதனை செய்ய வேண்டும் நிர்வாகமும் ஒத்துழைக்க வேண்டும் எவ்வளவோ மாற்றங்கள் செய்ய வேண்டும் நம்மளால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் ஒற்றுமை தான் நம்மளை உயர்வுக்கு கொண்டு வரும் என்று மேயர் ஜெகன் கூறினார்

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் ரவீந்திரன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வட்டச் செயலாளர் ரவிந்திரன் மாமன்ற உறுப்பினர் முத்துவேல் பள்ளி முன்னாள் மாணவர்கள் பிரதீப் ஜேசுராஜ் சாமுவேல் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்