எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் தி.மு.க ஆட்சியில் வழங்கியதை தமிழக அரசின் வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரை புறக்கணிக்கும் த.வெ.க அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசின் வெற்றி பயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களை புறக்கணிக்கும் த.வெ.க அரசை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பயண சலுகை வழங்கி அரசாணை வெளியிடக் கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சட்டசபையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இச்சலுகை வழங்கப்படும் என அறிவித்தும் இது நடைமுறைப்படுத்தாமல் அவலநிலை தொடர்கிறது இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டனம் தெரிவித்தும் முழக்கமிட்டனர்
