கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியில் நவராத்திரி விழாவையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கொலு பொம்மைகளைப் போன்று அணிவகுத்து நின்றனர்.

தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில்,
சுமார் மூன்று வயது முதலான மழலைகள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், அஷ்டலட்சுமிகள், தசாவதாரம், சிவன் குடும்பம், ராமர் பட்டாபிஷேகம், விஷ்ணு – லட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடங்களில் தத்ரூபமாகக் காட்சியளித்தனர்.

குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகள் வேடமணிந்திருந்தனர்.இதே போல அஷ்டலட்சுமி தெய்வங்கள், சிவன் குடும்பம்,தெய்வ தம்பதியர் ,முப்பெரும் தேவியர், மதுரை மீனாட்சி அம்மன், கருமாரியம்மன், பழனி முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடங்களில் குழந்தைகள் தத்ரூபமாகக் காட்சியளித்தனர்.

வண்ணமயமான ஆடைகள், கிரீடங்கள் மற்றும் அணிகலன்களுடன் குழந்தைகள் அணிவகுத்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் விப்ரஜா சவுந்தர்யா மற்றும் உதயேந்திரன் ஆகியோர் கூறுகையில், ஒவ்வோர் ஆண்டும் அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்கும் வகையில் தெய்வ வேடமிட்டு நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *