எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்த நாள் விழா: அரசு விழாவாகக் கொண்டாடத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தீர்மானம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதின இலக்கியத்தின் முன்னோடியும், தமிழின் முதல் நாவலாசிரியருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்த நாள் விழா,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சு. சுந்தரய்யா, மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் தமிழ்வேலு, தஞ்சாவூர் மண்டலக் கல்லூரி கல்வித்துறை இணை இயக்குநர் முனைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியனர்.
இதில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிறந்த நாளைத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் திருக்குறளை அரசு பதிப்பித்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார் மாவட்ட சிறப்பு தலைவர் சண்முகம், நிர்வாக அலுவலர் தங்கவேலு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் வீழிநாதன். தமுஎசக மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.
